/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் வீரர்கள் அவதி
/
அண்ணா விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் வீரர்கள் அவதி
அண்ணா விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் வீரர்கள் அவதி
அண்ணா விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் வீரர்கள் அவதி
ADDED : டிச 09, 2024 08:08 AM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு அரங்க ஓடுதளம், மைதானத்தில் ஊற்றெடுத்து வரும் மழை நீரால் விளையாட முடியாமல் வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் மஞ்சக்குப்பத்தில் பழமைவாய்ந்த அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு வாலிபால், ஓடுதளம், கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் உள் அரங்கம், கிரிக்கெட், இறகுப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு ஆடுகளங்கள் தனித்தனியாக உள்ளது.
இங்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் வந்து பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி
செல்கின்றனர். மாநகரின் மையப்பகுதியில் உள்ள மைதானத்தில், விளையாட்டு வீரர்களுக்கும், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும் வசதியாக இருக்கிறது.
இந்நிலையில் பெஞ்சல் புயலின்போது, மைதானத்தில் இருந்த மரங்கள் விழுந்தது. மேலும், மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால், கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது மரங்கள் அகற்றப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும், விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் ஊற்றெடுத்த நிலையில் உள்ளது. இதனால், சேறும், சகதியுமாக உள்ள மைதானம் மற்றும் ஓடுதளத்தை பயன்படுத்த முடியாமல் விளையாட்டு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, விளையாட்டு மைதானத்தை துரிதமாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.