/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுபாக்கத்தில் முதியவர் கொலை மர்ம நபருக்கு போலீசார் வலை
/
சிறுபாக்கத்தில் முதியவர் கொலை மர்ம நபருக்கு போலீசார் வலை
சிறுபாக்கத்தில் முதியவர் கொலை மர்ம நபருக்கு போலீசார் வலை
சிறுபாக்கத்தில் முதியவர் கொலை மர்ம நபருக்கு போலீசார் வலை
ADDED : செப் 05, 2024 05:03 AM
சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் நள்ளிரவில் முதியவரின் தலையில் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 65. இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் தங்களின் விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ராஜகோபால், தனது வீட்டிற்கு வெளியே கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் வீட்டிற்கு வெளியே அலறல் சத்தமும், நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, மணிமேகலை வெளியேவந்து பார்த்தபோது, கணவர் ராஜகோபால் தலையில் ரத்த காயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடன், அவரை வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ராஜகோபால் இறந்தார்.
தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜகோபாலை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்யப் பட்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.