/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் காயமடைந்த தனியார் பள்ளி முதல்வர் சாவு
/
விபத்தில் காயமடைந்த தனியார் பள்ளி முதல்வர் சாவு
ADDED : ஆக 05, 2024 04:51 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே விபத்தில் காயமடைந்த தனியார் பள்ளி முதல்வர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் அருள், 41. விருத்தாசலம் மகரிஷி வித்யா மந்தி பள்ளி முதல்வராக பணியாற்றி வந்தார்.
பள்ளி வேலைகளை முடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில், தனது பைக்கில் (டி.என்.91 - ஏ.டபள்யூ.0442) சென்று கொண்டிருந்தார்.
வி.குமாரமங்கலம் அருகே சென்ற போது, அந்த வழியில் எதிரே வந்த சைக்கிளில் மோதிவிடாமல் இருக்க பிரேக் அடித்தார். இதில், நிலை தடு மாறி அருள் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சிவசக்தி கொடுத்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.