/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு வெட்டும் தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
/
கரும்பு வெட்டும் தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கரும்பு வெட்டும் தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கரும்பு வெட்டும் தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ADDED : மே 14, 2024 04:50 AM

நெல்லிக்குப்பம்: கரும்பு வெட்டும்தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாககூறி,உடலை வாங்க மறுத்துஉறவினர்கள்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்தஎய்தனுாரை சேர்ந்தவர் சுரேஷ்,27; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர்,அதே பகுதியை சேர்ந்த கங்காணி மூலம், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாரில் கரும்பு வெட்ட சென்றார்.நான்கு மாதமான நிலையில்,டேவிட் மட்டும் வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில்சுரேஷ் கடந்த 10ம் தேதிமருந்து குடித்து இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்,சுரேஷ்இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை வேலைக்கு அழைத்து சென்ற கங்காணி டேவிட்டை விசாரிக்க வேண்டும் என நெல்லிக்குப்பம் போலீசில்முறையிட்டனர்.அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில், தென்காசியில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சுரேஷ் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எய்தனுார் வந்தது.
உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். காலை 4:00 மணி வரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்காததால் சுரேஷ் உடலை கடலூர் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனர்.
நேற்று காலை கங்காணி டேவிட்டிடம் நிவாரணம் வாங்கி தர வலியுறுத்தி சுரேஷ் உறவினர்கள் நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., பழனி, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு, பகல் 1:00 மணிக்கு மேல் உடலை வாங்கிச் சென்றனர்.

