/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்வாயில் விழுந்த மாணவி விருத்தாசலத்தில் பரபரப்பு
/
கால்வாயில் விழுந்த மாணவி விருத்தாசலத்தில் பரபரப்பு
கால்வாயில் விழுந்த மாணவி விருத்தாசலத்தில் பரபரப்பு
கால்வாயில் விழுந்த மாணவி விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : ஆக 15, 2024 05:15 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கடைவீதியில் திறந்த வெளியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பள்ளி மாணவி, விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் கடைவீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர், மழைநீர் சாலையில் தேங்கி நின்றது. மக்கள் போராட்டம் நடத்தியதால் கால்வாயில் இருந்த சிமென்ட் சிலாப்களை உடைத்து அகற்றி விட்டு துார்வாரப்பட்டது.
ஆனால், கால்வாய் இதுவரை சீரமைக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை பெண்ணாடம் சாலை, போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் அருகே தாயுடன் நடந்து சென்ற 7 ம் வகுப்பு படிக்கு மாணவி திறந்த நிலையில் உள்ள கால்வாயில் விழுந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். எவ்வித காயங்களும் இன்றி மாணவி தப்பினார்.
இதேபோல் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க, திறந்த வெளியில் உள்ள கழிவுநீர் கால்வாயை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.