/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தான் வரைந்த ஓவியத்தை ஸ்டாலினிடம் வழங்கிய மாணவர்
/
தான் வரைந்த ஓவியத்தை ஸ்டாலினிடம் வழங்கிய மாணவர்
ADDED : பிப் 23, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிப்பவர் கோகுல்நாத். ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்தார்.
பல்வேறு ஓவிய போட்டி களில் பரிசு பெற்றுள்ளார். இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தார்.
அதை நேற்று முன்தினம் கடலூர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினார். இதை பார்த்த ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்து அந்த படத்தில் மாணவன் கோகுல்நாத்தை கையெழுத்திட கூறி பெற்றுக்கொண்டார்.
தலைமையாசிரியர் தேவனாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர் கோகுல்நாத்தை பாராட்டினர்.

