ADDED : ஜூன் 24, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி போலீசார் ரோந்து சென்ற போது சொக்கன்கொல்லை மெயின் ரோட்டை சேர்ந்த மதியழகன் மனைவி வளர்மதி, 60, என்பவர் வீட்டில் பதுக்கி டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.