/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தையுடன் ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
/
குழந்தையுடன் ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
குழந்தையுடன் ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
குழந்தையுடன் ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
ADDED : ஆக 08, 2024 12:35 AM

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் மனைவி அஞ்சுகம், 26; திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது அஞ்சுகம் 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
இவர், நேற்று காலை தனது குழந்தையுடன் கடலுார் கெடிலம் ஆற்று பாலத்திற்குகு வந்தார். அங்கு திடீரென பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி ஆற்றில் குதிக்க முயன்றார். இதைக்கண்ட சாலையில் சென்ற பொதுமக்கள் அவரை தடுத்து கடலுார் மகளிர்போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அஞ்சுகத்தை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, தனது கணவர் குடும்ப செலவிற்கு சரிவர பணம் கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மகளிர் போலீசில் இரண்டு மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தேன். அப்போது, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும், கணவர் தொடர்ந்து குடும்பத்தை கவனிக்காமல் இருந்து வருகிறார். இதனால் மனமுடைந்து தனது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறினார்.
இதையடுத்து, அஞ்சுகத்திடம் போலீசார் புகார் மனு வாங்கிக்கொண்டு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கடலுாரில் பரபரப்பு ஏற்பட்டது.