/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு
/
பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 07, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சூரக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி ரேவதி,80: இவர், ஒரு மாதத்திற்கு முன் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம்வீட்டின் கதவு உடைந்திருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், ரேவதிக்குபோனில் தகவல் தெரிவித்தனர்.
அவர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 4 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.