/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED : மார் 15, 2025 12:46 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தெப்பல் உற்சவம் நடந்தது.
கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், கடந்த பிப்., 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினந்தோறும் காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு அபிேஷக ஆராதனை, இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று தெப்பல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் வீதியுலா நடந்தது.
தொடர்ந்து, நள்ளிரவு 1:00 மணியளவில், அலங்கரித்த தெப்பத்தில் சுவாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், கமிஷனர் பானுமதி, கோவில் செயல் அலுவலர் மாலா, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.