/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனு கொடுக்க மாலையுடன் வந்தவரால் பரபரப்பு
/
மனு கொடுக்க மாலையுடன் வந்தவரால் பரபரப்பு
ADDED : ஜூலை 02, 2024 05:46 AM

கடலுார்: சுடுகாடு இடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கழுத்தில் மாலையுடன் கலெக்டர்அலுவலகத்தில் மனு கொடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி அடுத்த பெரியகுமட்டியை சேர்ந்த மஹபூப் அலி மகன் முகமது சலாவுதீன். இவர் கழுத்தில் மாலை அணிந்து வந்து, கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், எங்கள் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 9.88 இடத்தில் சுடுகாடு பயன்படுத்தி வருகிறோம். இந்த இடத்தில் 3 சென்டை அதே பகுதியைசேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து மாடி வீடு கட்டியுள்ளார். இதனால், நாங்கள்சுடுகாட்டிற்கு இடவசதியின்றி அவதியடைந்து வருகின்றோம். எனவே, ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றி, சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தர கலெக்டர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.