/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடல் வழியாகவும் அணை கட்டுறாங்க...
/
கடல் வழியாகவும் அணை கட்டுறாங்க...
ADDED : மார் 31, 2024 04:48 AM

கிள்ளை, : லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடல் வழியாக பரிசுப் பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க கிள்ளை கடற்கரையில் கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடல் வழியாக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, கடலுார் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் கிள்ளை, முடசல் ஓடை கடற்கரை பகுதியில் நேற்று கடலுக்கு செல்லும் படகுகளையும், கரைக்கு திரும்பிய படகுகளையும் சோதனை நடத்தி வருகின்றனர்.

