/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: கடலுாரில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: கடலுாரில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: கடலுாரில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: கடலுாரில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : ஜூலை 01, 2024 06:58 AM

கடலுார்: கடலுாரில் நடந்த 'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன்பங்கேற்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் 2024ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் பிரிவு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 'ஆன் லைன்' கவுன்சிலிங் நடக்க இருக்கிறது.
இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவியாக, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி மற்றும் 'தினமலர்' நாளிதழ் இணைந்து டி.என்.இ.ஏ., தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி-2024 நிகழ்ச்சி கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
தினமலர் வழிக்காட்டி நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவியர் காலை 9:00 மணி முதலே ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் அரங்கில் குவியத் துவங்கினர். சரியாக காலை 10:30 மணிக்கு வழிக்காட்டி நிகழ்ச்சி துவங்கியது.
தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் தலைவர் ஸ்ரீராம் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள், விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், தரவரிசை போன்றவை குறித்து புரொஜக்டர் மூலம் விளக்கம் அளித்து பேசினார்.
இதனைதொடர்ந்து மாணவர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு மிகுந்த பாடப்பிரிவுகள் குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் தலைவர் ஸ்ரீராம், மாணவர்கள் சிறந்த கல்லுாரி தேர்ந்தெடுப்பது எப்படி, பாடப்பிரிவு தேர்வு செய்வது எப்படி தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் கருத்துரைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் 'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்ப பாடப் பிரிவு தேர்வு, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் தெரிவித்ததை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு வழிக்காட்டி நிகழ்ச்சி முடிவடைந்தது.
தினமலர் வழிக்காட்டி நிகழ்ச்சியில் கடலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.