/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு
ADDED : பிப் 27, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்,; நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் 150 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்தனர்.
மாணவி ரக் ஷிதா, மாணவர் சுரேந்தர், மாணவி யோகலட்சுமி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அவர்களுக்கு பரிசளிக்கும் விழா தலைமையாசிரியர் தேவநாதன் தலைமையில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் ரவிசங்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம், அரிமா சங்க ஸ்ரீதர், தமிழாசிரியர்கள் செல்வி, மஞ்சு, ஒருங்கிணைப்பாளர் ஷோபனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

