/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொகுதிக்கு திருமாவளவன் ஒன்றுமே செய்யவில்லை பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி பேச்சு
/
தொகுதிக்கு திருமாவளவன் ஒன்றுமே செய்யவில்லை பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி பேச்சு
தொகுதிக்கு திருமாவளவன் ஒன்றுமே செய்யவில்லை பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி பேச்சு
தொகுதிக்கு திருமாவளவன் ஒன்றுமே செய்யவில்லை பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி பேச்சு
ADDED : ஏப் 16, 2024 05:48 AM

காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் எம்.பி., திருமாவளவன் தொகுதிக்காக ஒன்றுமே செய்யவில்லை என, பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி பேசினார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின், பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். முன்னதாக காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தார்.
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிகள், லால்பேட்டை, வடக்கு கொளக்குடி, சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், வீரநத்தம், குமராட்சி, சர்வராஜன்பேட்டை, மேல வன்னியூர், கீழ வன்னியூர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது கார்த்தியாயினி பேசுகையில், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார். அப்போது, சிதம்பரம் தொகுதியின், 6 சட்டசபை தொகுதிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி, ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்புகள் நடத்தி, டாக்டர்கள், கலெக்டர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்.
ஐந்து ஆண்டுகள், தொகுதி எம்.பி., யாக இருந்த திருமாவளவன், தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. தொகுதி வளர்ச்சிக்காக லோக்சபாவில் எதையும் பேசவில்லை.
என்னை வெற்றி பெற் செய்தால், காட்டுமன்னார்விலில், நறுமண தொழிற்சாலை கொண்டு வருவேன். நான் ஏற்கனவே வேலூர் மேயராக 5 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்துள்ளேன். எனக்கு இத் தேர்தலில் தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
பா.ஜ., மாவட்டத் தலைவர் மருது, ஒன்றிய தலைவர்கள் சக்தி முருகன் சுரேஷ், பாம.க., மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், அ.ம.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் நாராயணமூர்த்தி, நகர செயலாளர் முத்துப்பாண்டியன், ஓ.பி.எஸ்., அணி நகர செயலாளர் காசி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

