/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மாப்பிள்ளை இவரு தான்... ஆனா சட்டை என்னோடது' : தொகுதி தான் சிதம்பரம்; வேட்பாளர்கள் வெளியூர்
/
'மாப்பிள்ளை இவரு தான்... ஆனா சட்டை என்னோடது' : தொகுதி தான் சிதம்பரம்; வேட்பாளர்கள் வெளியூர்
'மாப்பிள்ளை இவரு தான்... ஆனா சட்டை என்னோடது' : தொகுதி தான் சிதம்பரம்; வேட்பாளர்கள் வெளியூர்
'மாப்பிள்ளை இவரு தான்... ஆனா சட்டை என்னோடது' : தொகுதி தான் சிதம்பரம்; வேட்பாளர்கள் வெளியூர்
ADDED : மார் 30, 2024 06:36 AM
சிதம்பரம் : தொகுதி சிதம்பரமாக இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே வெளியூரை சேர்ந்தவர்கள்.
கடலுார் மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம் (தனி) என, இரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. சிதம்பரம் தொகுதி மூன்று மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டசபை தொகுதிகளை கொண்டது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளும், அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம் தொகுதிகளும், பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் தொகுதி உள்ளிட்ட ஆறு தொகுதிகளை கொண்டது.
இத்தொகுதியில் 1957, 62ல் காங்., எம்.பி., கனகசபை, 1967, 71ல் தி.மு.க., மாயவன், 1977 ல் அ.தி.மு.க., முருகேசன், 1980ல் தி.மு.க., குழந்தைவேலு, 1984, 89, 91ல் காங்., வள்ளல்பெருமான், 1996ல் தி.மு.க., எம்.பி., கணேசன் ஆகியோர் மட்டுமே கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
அதன்பிறகு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் எம்.பி., யாக உள்ளனர். அதில், 1998 ல் பா.ம.க., தலித் எழில்மலை, 1999, 2004ல் பா.ம.க., பொன்னுசாமி, 2009ல் வி.சி., திருமாவளவன், 2014ல் அ.தி.மு.க., சந்திரகாசி, 2019ல் வி.சி., திருமாவளன் என அனைவருமே வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான்.
1998 முதல் பிரதான கட்சிகளில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காதது தொண்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தி.மு.க., கூட்டணியில் வி.சி., திருமாவளவன், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் கட்சி ஜான்சிராணி ஆகியோர் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பா.ஜ., சார்பில் போட்டியிடும் கார்த்தியாயினி வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்.
படையப்பா படத்தில் ரஜினி - செந்தில் காமெடி காட்சி போல, 'சிதம்பரம் தொகுதி தான் ஆனால் வேட்பாளர்கள் எல்லாம் வெளியூர்' என்பது கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

