/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைது
/
என்.எல்.சி., அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைது
என்.எல்.சி., அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைது
என்.எல்.சி., அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைது
ADDED : மே 22, 2024 01:21 AM

நெய்வேலி : என்.எல்.சி., அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி நகரில் அதிகரித்து வரும் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, வட்டம் 5 அருகே முனீஸ்வரன் கோவில் செல்லும் சாலையில் முகமூடி அணிந்து பதுங்கியிருந்த மூவரை மடக்கி பிடித்ததில் அவர்கள் வீச்சரிவாள், இரும்பு ராடு மற்றும் மிளகாய் துாள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் நெய்வேலி வட்டம் 1 சிலோன் குடியிருப்பை சேர்ந்த உசேன் மகன் அப்புக்குட்டி (எ) முகமது ரபிக்,22; ராஜ் மகன் சதீஷ்குமார்,26; சின்னையன் மகன் கார்த்திகேயன்,25; என்பதும், இவர்கள் மூவரும் நெய்வேலி டவுன்ஷிப் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள என்.எல்.சி., அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.

