/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை வழக்கு மேலும் மூவர் கைது: இருவருக்கு வலை
/
ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை வழக்கு மேலும் மூவர் கைது: இருவருக்கு வலை
ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை வழக்கு மேலும் மூவர் கைது: இருவருக்கு வலை
ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை வழக்கு மேலும் மூவர் கைது: இருவருக்கு வலை
ADDED : ஏப் 25, 2024 02:19 AM

கடலுார்:ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பு:
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரிமானியத்தை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார்,47, கலைமணி, 41, இருவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு மாரியம்மன் கோவில் விழாவில் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜெயக்குமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கலைமணியை கைது செய்தனர்.
கடந்த 19ம் தேதி, ஓட்டளித்து விட்டு வீடு திரும்பிய ஜெயக்குமாரின் தம்பி ஜெய்சங்கர், இவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோரை கலைமணி மற்றும் அவரது தரப்பினர் கிண்டல் செய்தனர். இதுகுறித்து ஜெயக்குமார், இவரது மனைவி கோமதி உள்ளிட்டோர் தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்த கலைமணி தரப்பினர் தாக்கியதில் கோமதி இறந்தார்.
புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாகவே கொலை நடந்தது தெரிந்தது. இது தொடர்பாக கலைமணி, இவரது மனைவி தீபா உள்ளிட்ட 5 பேரை கடந்த 20ம் தேதி போலீசார் கைது செய்து, மேலும், 5 பேரை தேடி வந்தனர். இதில், பக்கிரிமானியம் பாண்டியன்,53, அறிவுமணி மகன் அருள்செழியன்,19, ராஜா, 41; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே கடந்த 2021ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பான தகராறு தான் கோமதி இறப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையிலும் இதுவே உண்மை என தெரியவந்துள்ளது. கோமதி இறப்பிற்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கை பெற்று, அனுமதிக்கப்பட்ட புலன் விசாரணை காலத்திற்குள் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

