/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்
/
கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்
கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்
கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்
ADDED : மார் 27, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் சந்தமேட்டை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 49; எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற இவர், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு கடந்த 22ம் தேதி நெஞ்சு வலி ஏற்படவே கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் நேற்று முன்தினம் சிறைக்காவலர்கள் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பில் அஜாக்கரதையாக இருந்த சிறை காவலர்கள் கதிர்வேல், பிரபாகரன், கோவர்த்தன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டார்.