/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதல் கடலுாரில் இருவர் பலி
/
ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதல் கடலுாரில் இருவர் பலி
ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதல் கடலுாரில் இருவர் பலி
ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதல் கடலுாரில் இருவர் பலி
ADDED : மார் 27, 2024 07:37 AM
கடலுார் : கடலுாரில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் உடல் நசுங்கி இறந்தனர்; ஒரு பெண் படுகாயமடைந்தார்.
கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் ரவி, 50; எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி, 35; இருவரும், புதுச்சேரி மருத்துவமனைக்கு செல்ல நேற்று காலை, வில்வநகரை சேர்ந்த சண்முகம், 60: என்பவரது ஆட்டோவில் சென்றனர்.
கடலுார் செம்மண்டலம் குண்டு சாலையில், ஹவுசிங் போர்டு அருகே ஆட்டோ வந்தபோது, புதுச்சேரியில் இருந்து எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ரவி மற்றும் ஆட்டோ டிரைவர் சண்முகம் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த சரஸ்வதி, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

