/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.மா.கா., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
த.மா.கா., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 01, 2025 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.
மாவட்டத் தலைவர் ஞானசந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் நெடுஞ்செழியன், ராமலிங்கம், புரட்சிமணி, ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில துணை தலைவர்கள் முன்னாள் எம்.பி., வெங்கடேசன், முனைவர் பாஷா, பொதுச்செயலாளர்கள் ஜெயச்சந்திரன், வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில நிர்வாகி வடலுார் அன்பு, மாநகர தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் எழிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.