/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இன்று மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் விடுமுறை
/
இன்று மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் விடுமுறை
ADDED : ஏப் 21, 2024 05:49 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வரும் 21ம் தேதி மற்றும் மே 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவின்படி, மகாவீர் ஜெயந்தியான இன்று 21ம் தேதி மற்றும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி ஆகிய இரு நாட்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் அரசு மதுபானக்கடை எப்.எல்1 மற்றும் மதுபானக் கடையுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 உரிமதலங்களில் எவ்வகை மதுபானங்களும் விற்பனை செய்யக் கூடாது.
மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமைதாரர் கடை விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

