/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நாளை குரூப்- 2 தேர்வு 8:30க்குள் வரவேண்டும்'
/
'நாளை குரூப்- 2 தேர்வு 8:30க்குள் வரவேண்டும்'
ADDED : செப் 13, 2024 06:56 AM
கடலுார்: கடலுாரில், நாளை (14ம் தேதி) நடக்கும், குரூப் 2 தேர்வுக்கு, 8:30 மணிக்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில், நாளை (14 ம் தேதி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II மற்றும் IIஏஅடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. காலை 9:30 மணி முதல் 12.:30 வரையில் நடத்தப்படுகிறது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு வர வேண்டும். 9:00 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு (ஹால்டிக்கெட்) ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பான் எண் வாக்காளர் அடையாள அட்டையின் அசல் (அல்லது) நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் தேர்வுக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்திக்குறி்ப்பில் கூறப்பட்டுள்ளது.

