
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தனர்.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கெளமாரி, சாமுண்டி என சப்தகன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.

