/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேலம் புறவழிச்சாலையில் போக்குவரத்துக்கு தடை
/
சேலம் புறவழிச்சாலையில் போக்குவரத்துக்கு தடை
ADDED : மார் 14, 2025 05:26 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் நகருக்கு வெளியே செல்லும், சேலம் புறவழிச்சாலையில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தின் துாண்கள் மீது ராட்சத கிரேன்கள் மூலம் கிரீடர் பொறுத்தும் பணி நடக்க உள்ளது.
இதனால், பொதுமக்கள் பாதிக்காத வகையில், சித்தலுார் ரவுண்டானாவில் இருந்து பொன்னேரி ரவுண்டானா வரை புறவழிச்சாலையில், இன்று முதல் பகல் நேர போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. ஒரு மாதம் வரை இப்பணி தொடரும் என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அய்யாதுரை, உதவி கோட்டப் பொறியாளர் வசந்தபிரியா தெரிவித்தனர்.