/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
/
பரங்கிப்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
பரங்கிப்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
பரங்கிப்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஏப் 22, 2024 06:17 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை, சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் பல ஆண்டாக அகற்றப்படாததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கீரைக்கார தெரு,சின்னக்கடை தெரு பகுதியில் எதிர், எதிரே இரு வாகனங்கள் வரும்போது ஒதுங்கிச்செல்ல முடியாமல் போக்குவரத்துநெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொள்கிறது. இதனால், வாகனங்களில் உள்ளவர்கள் கீழே இறங்கி வந்து, போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தியுள்ள பைக்குகளை ஓரம்கட்டிய பிறகு வாகனங்கள் செல்ல வேண்டிய அவலநிலைஏற்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத்துறை சாலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் சென்று வருகிறது.
சமீபகாலமாக, சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கீரைக்கார தெரு, சஞ்சிவிராயர் கோவில் தெரு, சின்னக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில், சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. இதனால், எதிர், எதிரே இரு கனரக வாகனங்கள் வரும்போது, ஒதுங்கி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதில், யார், பின்னால் செல்வது என அவர்களுக்குள் 'ஈகோ'பிரச்னையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது.
இதுபோன்ற நேரங்களில், அவசரத்திற்காக செல்லுபவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் போக்குவரத்துநெரிசலில் சிக்கிக்கொள்கின்றனர்.
பல நேரங்களில் பஸ்சில் இருந்து கண்டக்டர் கீழே இறங்கி வந்து, போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளை ஓரம்கட்டிய பிறகு பஸ் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும், பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து சஞ்சிவிராயர் கோவில் தெருவில், வங்கிகள் மற்றும் கடைகளுக்கு செல்லுபவர்கள், பைக்குகளை போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரங்களில் இரு பக்கமும் நிறுத்தப்படுவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.எனவே, பரங்கிப்பேட்டை ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

