/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிற்சி டாக்டர்கள் கலெக்டரிடம் புகார்
/
பயிற்சி டாக்டர்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : மார் 09, 2025 05:53 AM

கடலுார் : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிற்சி டாக்டர்களுக்கு சான்றிதழை தராமல் அலைக்கழிப்பதாக, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனு விபரம்: அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லுாரியில் அக்குபேஷனல் தெரபி படித்துவிட்டு பயிற்சி மருத்துவர்களாக உள்ளோம். எங்கள் பேட்ச் மற்றும் முன்னாள் ஐந்து ஆண்டுகள் படித்த மாணவர்களுக்கும் அகாடமிக் கவுன்சில் ஆப் அக்குபேஷனல் தெரபி லைப் டைம் மெம்பர்ஷிப் சான்றிதழை தராமல் அலைக்கழிக்கின்றனர்.துறை தலைவர் மற்றும் அலுவலர்களிடம் முறையிட்டும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் சான்றிதழ் தரவில்லை. கலெக்டர் தலையிட்டு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.