நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சி முகாம், கடந்த 5ம் தேதி துவங்கியது. மூத்த பேராசிரியர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார்.
பேராசிரியர்கள் பாண்டியன், வைஷ்ணவி தேவி, ராஜரத்தினம், ராஜபிரியா, துணை பேராசிரியர் கருணாகரன், ஆசிரியர் வாசுகி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
ஒருவாரம் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.