/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
/
கடலுாரில் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
கடலுாரில் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
கடலுாரில் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 01, 2024 06:31 AM

கடலுார், : கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
கடலுார் லோக்சபா தொகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடந்தது. நேற்று இறுதிகட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் வரும் 4ம் தேதி நடக்கிறது. கடலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கடலுார்,தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதற்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமரா மூலம் அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு நேற்று கடலுார் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
இதில், ஓட்டு எண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்தும், ஓட்டு எண்ணும் பணியில் எவ்வாறு ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆகாஷ் மற்றும் ஓட்டு எண்ணும் அலவலர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.