/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு
/
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 25, 2024 05:44 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் போல் அடம் செய்ததால் சப் கலெக்டர் ராஷ்மிராணி டென்ஷன் ஆனார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டெக் பார்க் அரங்கில் , நேற்று சிதம்பரம் லோக்சபா தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் மொத்தம் 2623 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் அருண் தம்புராஜ், சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி , ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வட்டாட்சியர் ஹேமாஆனந்தி, தேர்தல் அலுவலர் செல்வ லட்சுமி, உதவி அலுவலர் புகழேந்தி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் பலர் உடன் இருந்தனர்.
தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள் சரியான முறையில் வகுப்பு கவனிக்காமல் மாணவர்கள் போல் நடந்து கொண்டு, அங்கும் இங்கும் சென்றதால், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி கடுமையாக டென்ஷன் ஆகி சத்தம் போட்டார்;. ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
ஆசிரியர்கள்ளின் செயல்பாடு வருவாய் துறை அலுவலர்களின் முகம் சுளிக்க செய்தது.

