/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
தேர்தலில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 25, 2024 05:41 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்து இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த பயிற்சிக்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார், துணை தாசில்தார்கள் கோவிந்தன், முருகேஸ்வரி, தேர்தல் உதவியாளர்கள் ஆனந்தகுமார், சுரேஷ் உடனிருந்தனர்.
அதில், 286 ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல், பாதுகாப்பாக திறந்து சீல் வைப்பது, பழுது நீக்குதல் குறித்து மண்டல அலுவலர்கள் மூலம் பயிற்சி தரப்பட்டது. அதன்படி, காலை, மாலை என இரு கட்டங்களாக 1,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட்டது.

