ஹமாஸ் அமைப்பு கடும் விளைவை சந்திக்க நேரிடும்; இஸ்ரேல் தாக்குதலுக்கு டிரம்ப் ஆதரவு
ஹமாஸ் அமைப்பு கடும் விளைவை சந்திக்க நேரிடும்; இஸ்ரேல் தாக்குதலுக்கு டிரம்ப் ஆதரவு
ADDED : அக் 29, 2025 09:51 AM

வாஷிங்டன்: ''காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப், ''ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'', என்றார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது, போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்தார். இது தொடர்பாக, அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் ஒரு இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கொன்றார்கள்.
எனவே இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கினர். அவர்கள் திருப்பித் தாக்க வேண்டும். ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த தாக்குதல் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதுவும் பாதிக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

