ADDED : செப் 07, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே நாய்கள் கடித்ததால் காயமடைந்த ஆண் மானை, வனத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் நேற்று காலை 6:00 மணி அளவில் இரண்டு வயது மதிக்க தக்க ஆண் மான் ஒன்றை நாய்கள் துரத்தி கடித்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை துரத்திவிட்டு, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விருத்தாசலம் வனச்சரக அலுவலர்கள் விரைந்து வந்து காயமடைந்த மானிற்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப்பின் மான், வனத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.