/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழங்குடி இருளர்கள் கலெக்டரிடம் மனு
/
பழங்குடி இருளர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 09, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பண்ருட்டியில் இருளர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கு உரிய இடத்தை அளந்து கொடுக்கக்கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கொடுத்த மனு:
பண்ருட்டி தாலுகாவிற்குட்பட்ட பாரதி நகர், குயிலாபாளையம், பாலுார் அகரம், திருகண்டேஸ்வரம், மேல்கவரப்பட்டு, பக்கிரிபாளையம், மேல்மாம்பட்டு, புதுப்பேட்டை, ஏரிப்பாளையத்தில் இருளர் சமூகத்தினருக்கு, காடாம்புலியூர் ராஜகணபதி நகரில் 96பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதில், 62பேருக்கு மட்டுமே, வீட்டுமனை அளந்து விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 34குடும்பத்தினருக்கு இடம் அளவீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.