/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காமராஜர் கல்லுாரியில் முப்பெரும் விழா
/
காமராஜர் கல்லுாரியில் முப்பெரும் விழா
ADDED : மார் 30, 2024 06:30 AM

புவனகிரி : கீரப்பாளையம் காமராஜர் கல்லூரியில் விதைகள் நூல் வெளியீட்டு விழா, இந்திய கிராமப்புற கல்வி எழுதள மைய ஆண்டு விழா மற்றும் மாத இதழ் வெளியிட்டு விழா நடந்தது.
இந்திய கிராமப்புற கல்வி எழுதள மைய நிறுவனர் சுரேஷ்கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிமாறன் வரவேற்றார். டாக்டர் இணையத்துல்லா, அன்புமணி, எழிலரசன் முன்னிலை வகித்தனர்.
கற்றல் கற்பித்தல் குறித்து லட்கேசன் ஆதிரை மொழிபெயர்ப்பில் வெளியான விதைகள் நுாலினைமுன்னாள் காங்., தலைவர் அழகிரி வெளியிட, சினிமா இயக்குனர் பொன்வண்ணன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நெல்லைமுத்து, எழுத்தாளர் எட்வின், சென்னை ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் கென்னித்ராஜ்அன்பு, காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் தமிழரசு சம்பந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பல்வேறு சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினர்.
ஏற்பாடுகளை வடலூர் ஆதிரை உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
ராஜசெல்வம் நன்றி கூறினார்.

