/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐ.டி.ஐ., மாணவரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
/
ஐ.டி.ஐ., மாணவரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஜூன் 09, 2024 02:59 AM

நெய்வேலி, : நெய்வேலியில் ஐ.டி.ஐ., மாணவரை தாக்கி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -1, சிலோன் குடியிருப்பை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சஞ்சய், 19. நெய்வேலி அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஐ.டி.ஐ.,க்கு சென்று திரும்பியபோது, 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியது.
இதுகுறித்து சஞ்சய் கொடுத்த புகாரில், நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான டெல்டா பிரிவு சிறப்பு எஸ்.ஐ., க்கள் பாபு, தாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவரை தாக்கி பணம் பறித்த கும்பல், டவுன்ஷிப் வட்டம் -5ல் உள்ள மயானம் அருகே மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றதும், அந்த கும்பல் தப்பியோடியது. போலீசார் விரட்டியதில், நெய்வேலி அடுத்த சொரத்தங்குழி ஜெயராமன் மகன் அசோக்ராமன். 26; வடக்கு மேலுார் வடக்கு தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் எலி (எ) சந்துரு, 21; இருவர் மட்டும் சிக்கினர். இருவரும் தப்பியோடியதுபோது கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து இருவரையம் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.