/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காப்பர் ஒயர் திருட்டு இருவர் கைது
/
காப்பர் ஒயர் திருட்டு இருவர் கைது
ADDED : ஏப் 07, 2024 05:19 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே பாசன மோட்டாரின் காப்பர் ஒயரை திருடிய இருவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெண்ணாடம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவரது வயலில் உள்ள மின்மோட்டாரில் இருந்த காப்பர் ஒயர்களை, மர்ம நபர்கள் இருவர் திருடினர். இதை பார்த்த மணிகண்டன் சத்தம் போட்டார். அருகிலிருந்தவர்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் சேத்தியாதோப்பு ராஜேந்திரன் மகன் சூலகருப்பன், 30, கீரமங்கலம் குணசேகரன் மகன் அன்பழகன், 29, என்பதும், இருவரும் சேர்ந்து சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் உள்ள பாசன மோட்டார்களில் காப்பர் ஒயர்கள் திருடுவதை ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, சூலகருப்பன், அன்பழகன் இருவரையும் கைது செய்து, காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.

