ADDED : ஜூன் 20, 2026 07:22 PM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் கீழக்குப்பம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கிழக்குப்பம் மின்வாரிய அலுவலகம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சத்திரம் புதுார் தெற்கு தெருவை சேர்ந்த சதானந்த மகன் சதீஷ் 21; மருங்கூர், அம்பேத்கார் தெருவை சேர்ந்த தனவேல் மகன் தமிழ் முரசு 20; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இருவரும் ஆகாஷ் என்பவரிடம் கஞ்சா வாங்கி வந்து மூவரும் கூட்டாக விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சதீஷ் மற்றும் தமிழ் முரசு, ஆகிய இருவரையும் கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
