UPDATED : ஜூன் 20, 2026 07:28 PM
ADDED : ஜூன் 20, 2026 07:22 PM
பரங்கிப்பேட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, சட்டசபையில் விவாதிக்க, சபாநாயகரிடம் புவனகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் கடிதம் கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டசபை விதி 55 ன் கீழ், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களை அமைக்க, இந்துஸ்தான் நிறுவனம் ஆயில் எக்ஸ்பிரேஷன் கம்பெனி மாநில, மத்திய அரசுகளிடம் அனுமதி கோரியுள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளம் கெடுவதோடு, மாங்குரோவ்ஸ் காடுகள் அழியும் அபாயம் ஏற்படும் என்பதால், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து, சட்டசபையில் விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
