ADDED : ஜூலை 01, 2024 06:23 AM
திட்டக்குடி : ராமநத்தம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டுபேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி நேற்று அதிகாலை 4மணிக்கு வெள்ளாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
வாகையூர் கிராமம் அருகே வெள்ளாற்றில் ஜே.சி.பி., லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஒரு கும்பல் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தது. போலீசாரைப் பார்த்த அந்த கும்பல் தப்பியோடிய நிலையில், அதில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மணல் திருட்டிற்கு பயன்படுத்திய ஜே.சி.பி., லாரி, பல்சர் பைக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம், ஆக்கனுார் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், ராமநத்தத்தைச்சேர்ந்த மணிவேல், குமாரை கிராமத்தைச் சேர்ந்த கோகுல்,23, நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்,23, ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
ராமநத்தம் போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து கோகுல் மற்றும் ஐயப்பனைக் கைது செய்தனர்.