ADDED : மார் 15, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே ஜாமினில் வெளிவந்த வாலிபர் உட்பட கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் நாச்சியார்பேட்டை இளங்கோவன் மகன் சத்யகுமார், 21; கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான, இவர், ஜாமினில் வந்தார். பள்ளிப்பட்டு உறவினர் வீட்டில் இருந்த இவரை பார்க்க, நண்பரான எம்.பரூர் விஜயகுமார் மகன் கபிலன், 21; என்பவர் நேற்று சென்றிருந்தார்.
இவர்களிடம் கஞ்சா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மங்கலம்பேட்டை போலீசார் இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சத்ய குமார், கபிலனை போலீசார் கைது செய்தனர்.