ADDED : மே 15, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் இளம்பெண்களை கிண்டல் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு காலனி புதுமனை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ், 44; இவரது இரண்டு மகள்களும் நடுவீரப்பட்டில் உள்ள கடையில் வேலை செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நடுவீரப்பட்டு காலனி ஓடை அருகே வரும் போது விலங்கல்பட்டை சேர்ந்த பாலசுந்தரம்,39; மணிகண்டன்,33; ஆகிய இருவரும் ராமதாஸ் மகள்ளை ஆபாசமாக பேசி கிண்டல் செய்தனர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் பாலசுந்தரம், மணிகண்டன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.