/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இரண்டு பேர் கைது
/
நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இரண்டு பேர் கைது
நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இரண்டு பேர் கைது
நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இரண்டு பேர் கைது
ADDED : பிப் 27, 2025 09:24 AM

கடலுார்; கடலுார் அருகே நண்பர்களை கொன்று புதைத்த வாலிபர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த டி.புதுாரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அப்புராஜ்,22. எம்.புதுாரைச் சேர்ந்தவர் பாலகுரு மகன் சரண்ராஜ்,22. இருவரும் கடந்த ஜன., 22ம் தேதி முதல் காணவில்லை. புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில் இருவரின் நண்பரான அதேப் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்,22, என்பவரை போலீஸ் விசாரணை செய்ததில், அப்புராஜ், சரண்ராஜ் ஆகிய இருவரையும் பால்ராஜ் கொலை செய்து மணல் குவாரியில் புதைத்தது தெரிந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய எம்.புதுாரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் தருண்குமார்,19, என்பவரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணைக்காக பால்ராஜ் மற்றும் தருண்குமாரை போலீசார், கொலை நடந்த நெய்வேலி பகுதியில் உள்ள மணல் குவாரிக்கு அழைத்துச்சென்றனர். அப்போது இருவரும் தப்பிச்செல்ல முயன்றபோது, பள்ளத்தில் விழுந்ததில் இருவரின் கால் உடைந்தது.
சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.