/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் சதய உற்சவம்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் சதய உற்சவம்
ADDED : ஏப் 30, 2024 05:56 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் சதய உற்சவத்தில், திருநாவுக்கரசர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் புராணத்தில் அருளியபடி, ஆண்டு தோறும் 10 நாட்கள் அப்பர் சதய உற்சவம் நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சியில் திலகவதியார் மருள்நீக்கியாருக்கு திருநீற்றை அளித்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 25ம் தேதி சமணர்கள் அப்பரை சுண்ணாம்பு நீற்றறையில் இடுதல், யானை ஏவுதல், 26ம் தேதி அப்பர் பெருமானை கடலில் சுண்ணாம்பு கல்லால் வீழ்த்திடும் நிகழ்ச்சி தெப்ப திருவிழா நடந்தது.
28ம் தேதி காலை 7:00 மணிக்கு திலகவதியார் நந்தனவத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளி நீர்,மோர் பானகம் வழங்கும் நிகழ்ச்சியும். அப்பூதியடிகள் அடிகளாரை கண்டு உரையாடி அவருடன் அமுத உண்பதற்கு முன் அவரது மகனை பாம்பின் விஷம் நீக்கும் நிகழ்வு நடந்தது. நேற்று மகேஸ்வர பூஜை நடந்தது. இன்று (30ம் தேதி) அடியார் துயர்நீக்க நாள்தோறும் படிக்காசு பெற்ற நிகழ்ச்சியும். மே 1 ம் தேதி, சமணர்களால் மறைக்கப்பட்ட சிவலிங்க பெருமானை வெளிபடுத்தி வணங்கிய நிகழ்வும். மாலை நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. 3ம் தேதி பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கயிலாய காட்சியும். திருபுகளுாரில் அப்பர் முக்தி அடையும் நிகழ்வும் நடக்கிறது.

