/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமத் உடையவர் சபா கடலுாரில் வைஷ்ணவ மாநாடு
/
ஸ்ரீமத் உடையவர் சபா கடலுாரில் வைஷ்ணவ மாநாடு
ADDED : ஆக 12, 2024 05:46 AM

கடலுார்: கடலுாரில் ஸ்ரீமத் உடையவர் சபா சார்பில் முதலாம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு நடந்தது.
நிகழ்ச்சியில், ஸ்ரீமத் உடையவர் சபா துணை தலைவர் ராமலிங்கம் கருட கொடி ஏற்றினார். இணை செயலாளர் ஸ்ரீமதி ராஜேந்திரன், திருமால் இறை வணக்கம் பாடினார்.
தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
ராமானுஜன் அடிப்பூ என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள், மங்களசாஸனம் என்ற தலைப்பில் அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள், யானை பாகன் என்ற தலைப்பில் கிடாம்பி நாராயணன் சுவாமிகள் பேசினர். கடலுார் லட்சுமண சுவாமிகள் சிறப்புரையாற்றினார்.
அப்போது, ஆண்டாள் கோஷ்டியினர், பகவத் பாகவதோத்தமர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செயலாளர் கிேஷார் நன்றி கூறினார்.

