/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
/
வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 10, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : மீன் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதித்தது.
கேரளாவிற்கு மீன்கள் ஏற்றிக் கொண்டு நேற்று மதியம் 12:50 மணிக்கு புவனகிரி வழியாக வேன் சென்றது. புவனகிரி அடுத்த இரட்டைக்குளம் அருகே திடீரென சாலையின் குறுக்கே மாடு ஓடியதால் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில், டிரைவர், கிளினீர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கிரேன் மூலமாக வேன் அப்புறப்படுத்தப்பட்டது.
இதனால் புவனகிரி சாலையில் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. புவனகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.