/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதே நோக்கம் வி.சி., வேட்பாளர் திருமாவளவன் பேச்சு
/
தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதே நோக்கம் வி.சி., வேட்பாளர் திருமாவளவன் பேச்சு
தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதே நோக்கம் வி.சி., வேட்பாளர் திருமாவளவன் பேச்சு
தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதே நோக்கம் வி.சி., வேட்பாளர் திருமாவளவன் பேச்சு
ADDED : ஏப் 16, 2024 11:03 PM

சிதம்பரம்- தேர்தலில் பா.ஜ., வை வீழ்த்துவதே நோக்கம் என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
சிதம்பரம் தொகுதி வி.சி., வேட்பாளர் திருமாவளவன், பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பு.முட்லுாரில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமையில் நேற்று காலை பிரசாரத்தை துவக்கினார்.
எம்.எல்.ஏ., க்கள் சிந்தனைச்செல்வன், பாலாஜி, ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் ராஜவேலு, சேது, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து மங்சக்குழி, குறியாமங்கலம், அருண்மொழித்தேவன், வல்லம், தச்சக்காடு, வேளங்கிப்பட்டு, மணிக்கொல்லை, பெரியப்பட்டு உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர்.
பிரசாரத்தில் திருமாவளவன் பேசுகையில், இந்த தேர்தலில் அ.தி.மு.க., வை வீழ்த்துவது நோக்கமல்ல. பா.ஜ., வை வீழ்த்த வேண்டும். மோடியின் மோசமான ஆட்சியை வீழ்த்த, முதல்வர் ஸ்டாலின், ராகுலும் வியூகம் அமைத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி, தேர்தல் வந்தவுடன் 10 முறை முறை வந்துள்ளார். காங்கிரசுக்கு பதிலாக தி.மு.க., தான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரசாரம் செய்து வருகிறார்.
பழனிசாமி பற்றியோ அ.தி.மு.க., வை பற்றியோ, தி.மு.க., தலைவர் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க., வை வீழ்த்துவது நோக்கமல்ல. பா.ஜ., வை வீழ்த்துவதுதான் நோக்கம் என, பேசினார்.

