ADDED : ஜூலை 08, 2024 04:33 AM
வேப்பூர்: கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஊராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை நேற்று முன்தினம் இரவு வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
தொடர்ந்து, சிறுநெசலுாரில் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் அமைக்கப்பட்ட வி.சி., கொடி கம்பத்தையும் அகற்றினர். இதனையறிந்த வி.சி., கட்சி கிளை செயலர் பிரசாந்த், நல்லுார் வி.சி., ஒன்றிய செயலர் சந்தோஷ் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை கட்சிக் கொடி கம்பம் அகற்றப்பட்ட இடத்திற்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து, கொடி கம்பம் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், கலைந்துச் சென்றனர்.
சிறுநெசலுாரில் திருச்சி சர்வீஸ் சாலையில் வி.சி., கொடிக்கம்பத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.