/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜவுளி கடையில் திருடும் வீடியோ வைரல்
/
ஜவுளி கடையில் திருடும் வீடியோ வைரல்
ADDED : மே 02, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் மூன்று பெண்களுடன் ஒருவர் துணி எடுக்க வந்துள்ளார்.
பெண்கள் புடவை ரகங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, உடன் வந்த நபர், ஒவ்வொரு புடவையாக லாவகமாக திருடி கை பைக்குள் வைத்து எடுத்து சென்று விட்டார். இரவு கடையின் உரிமையாளர் இருப்பு சரிபார்த்தபோது, புடவையின் எண்ணிக்கை குறைந்திருந்தது தெரியவந்தது.
அதைடுத்து, கடையின் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராயும் போது வீடியோவில் புடவைகளை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி, சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

