/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் விநாயகர் சிலைகள விஜர்சனம்
/
புவனகிரியில் விநாயகர் சிலைகள விஜர்சனம்
ADDED : செப் 10, 2024 12:42 AM

புவனகிரி: புவனகிரி மற்றும் மருதூர் போலீஸ் எல்லைக்குட்டப் பகுதிகளில் 38 இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று நீர்நிலைகளில் விஜசர்சனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புவனகிரி பகுதியில் போலீஸ் அனுமதியுடன் வைக்கப்பட்ட சிலைகள் ஒருங்கிணைத்து விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்த வகையில் புவனகிரி பகுதியில் 24 இடங்களிலும், மருதூர் பகுதியில் 14 இடங்கள் என 38 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அந்தந்த பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து புவனகிரி பகுதியிலும், மருதுார் பகுதியிலும் உள்ள நீர் நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் விஜர்சனம் செய்தனர்.

